செய்திகள்

திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு

Published On 2019-03-19 20:38 GMT   |   Update On 2019-03-21 06:09 GMT
பிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கடலில் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். #Whale #PlasticWaste
மணிலா:

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் 2050-ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் எனவும் கடந்த ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்தது.

குறிப்பாக சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது.



இந்த நிலையில் பிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிலங்கத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   #Whale #PlasticWaste
Tags:    

Similar News