செய்திகள்

ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியது

Published On 2019-02-22 15:54 GMT   |   Update On 2019-02-22 15:54 GMT
புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது. #Jaishheadquarters #Pakgovttakescontrol
இஸ்லாமாபாத்:

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் மீது எந்த நடவடிக்கை எடுக்காததுடன், இந்தியா மீதான தாக்குதல்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது.

லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹவல்பூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாண அரசு கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாத் சவுத்ரி இன்று இரவு தெரிவித்துள்ளார். #Jaishheadquarters #Pakgovttakescontrol
Tags:    

Similar News