செய்திகள்

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவி - பரிந்துரையில் இருந்து விலகினார் ஹீத்தர் நாவேர்ட்

Published On 2019-02-18 00:12 GMT   |   Update On 2019-02-18 00:12 GMT
ஐ.நா.வின் அமெரிக்க தூதருக்கான பரிந்துரையில் இருந்து தான் விலகுவதாக ஹீத்தர் நாவேர்ட் அறிவித்தார். #UNAmbassador #HeatherNauert
வாஷிங்டன்:

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே கடந்த ஆண்டு தனது பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து அந்த பதவிக்கு உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் பெண் பத்திரிகையாளருமான ஹீத்தர் நாவேர்ட்டை ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரை செய்தார்.

ஆனால் ஹீத்தர் நாவேர்ட்டுக்கு தூதரக பணியில் போதிய அனுபவம் இல்லை என கூறி ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ஐ.நா.வின் அமெரிக்க தூதருக்கான பரிந்துரையில் இருந்து தான் விலகுவதாக ஹீத்தர் நாவேர்ட் அறிவித்தார். தனது குடும்ப நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஐ.நா.வின் அமெரிக்க தூதருக்கான புதிய வேட்பாளரை டிரம்ப் விரைவில் பரிந்துரை செய்வார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News