செய்திகள்

வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது - ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை

Published On 2019-02-13 02:24 IST   |   Update On 2019-02-13 02:24:00 IST
வங்காளதேசத்தில் ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #Bangladesh
டாக்கா:

வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.

இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படுகிறது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது. இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை.

இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bangladesh
Tags:    

Similar News