செய்திகள்

மடகாஸ்கர் நாட்டின் அதிபராக ஆன்ட்ரி ரஜோலினா பதவி ஏற்றார்

Published On 2019-01-20 09:43 GMT   |   Update On 2019-01-20 09:43 GMT
மடகாஸ்கர் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 55.66 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆன்ட்ரி ரஜோலினா இன்று பதவியேற்றார். #AndryRajoelina #MadagascarPresident
அன்டனானாரிவோ:

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் நாட்டின் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் 55.66 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆன்ட்ரி ரஜோலினா நேற்று அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.



தனது ஆட்சிக்காலத்தில் நாட்டில் உள்ள 6 மாகாணங்களும் சரிசமமான வளர்ச்சியை பெறும் என தனது பதவியேற்பு விழா பேருரையில் குறிப்பிட்ட ஆன்ட்ரி ரஜோலினா, சூரிய ஆற்றலின் மூலம் மின்சார உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு மிககுறைவான விலையில் வினியோகிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

மடகாஸ்கர் நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக சுமுகமான முறையில் இங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததன் மூலம் உலக அரசியல் வரலாற்றில் நமது நாடு தனி முத்திரையை பதித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்விழாவில் சுமார் 35 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். #AndryRajoelina #MadagascarPresident
Tags:    

Similar News