செய்திகள்

இந்தோனேசியாவில் ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து 5 பேர் பலி

Published On 2019-01-19 15:23 IST   |   Update On 2019-01-19 15:23:00 IST
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். 2 பேர் மாயமாகி உள்ளனர். #Indonesia #carplunged
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் உள்ள மேற்கு சுமத்ரா மாகாணத்தில் மினிவேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாங்க்காட் மாவட்டத்திற்குட்பட்ட ஸ்டங்கிட் கிராமத்தில், மரப்படகில் ஒரு மினிவேனை ஏற்றி வாம்பு நதியினை கடந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

படகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேனின் என்ஜினை ஆப் செய்யாமல் இருந்ததால், திடீரென படகில் இருந்து கிளம்பி, ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் வேனில் இருந்த 5 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் என்ன ஆனார்கள்? என தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். #Indonesia #carplunged







Tags:    

Similar News