செய்திகள்

நைஜீரியாவில் ஊருக்குள் புகுந்து 17 பேரை சுட்டுக்கொன்ற கும்பல்

Published On 2018-12-24 05:34 GMT   |   Update On 2018-12-24 05:34 GMT
நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் திடீரென ஊருக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றனர். #NigeriaAttacks
அபுஜா:

நைஜீரியாவில் கும்பல்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக ஜம்பாரா, கதுனா மாநிலங்களில் துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜம்பாரா மாநிலம் பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் சனிக்கிழமை திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.



தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கும் வகையில், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சிலரது இறுதிச்சடங்கில் மாநில பொறுப்பு ஆளுநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். #NigeriaAttacks
Tags:    

Similar News