செய்திகள்

நேபாளத்தில் சோகம் - கல்வி சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலி

Published On 2018-12-21 15:01 GMT   |   Update On 2018-12-21 15:01 GMT
நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NepalBusAccident
காத்மண்டு:

நேபாளம் நாட்டின் டாங் மாவட்டம், கோராஹி பகுதியில் கிருஷ்ணா சென் இச்சுக் தொழில்நுட்ப பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளி சார்பில் 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சல்யான் மாவட்டத்தில் உள்ள தாவரவியல்
பூங்காவுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, டாங் மாவட்டத்தின் துல்சிபூர் பகுதியில் வரும்போது நிலைதடுமாறிய பஸ் திடீரென அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கல்வி சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #NepalBusAccident
Tags:    

Similar News