செய்திகள்

ஊழல் வழக்கில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அதிபரின் பணம் 65 லட்சம் டாலர் முடக்கம்

Published On 2018-12-16 20:44 IST   |   Update On 2018-12-16 20:44:00 IST
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுக்காக பணம் திரட்டிய ஊழல் வழக்கில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் பணம் 65 லட்சம் டாலர்கள் முடக்கப்பட்டது. #Maldivesformerpresident #Yameen
கொழும்பு:

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 
 
மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார். 

58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலிஹ் வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் பதவி ஏற்றார்.

இதற்கிடையில், தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுகளுக்கு நிதி திரட்டியதாக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக நேற்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அப்துல்லா யாமீனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள சுமார் 65 லட்சம் டாலர்கள் மதிப்பிலான பணத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Maldivesformerpresident #Yameen
Tags:    

Similar News