செய்திகள்

பிரான்சில் வீட்டு பாடம் எழுதாததால் சிறுவன் அடித்துக் கொலை

Published On 2018-11-23 11:26 IST   |   Update On 2018-11-23 11:26:00 IST
பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் நகரில் வீட்டு பாடம் எழுதாததால் 9 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். #MulhouseBoyMurder
பாரீஸ்:

பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் நகரில் 9 வயது சிறுவன் ஒருவன் வீட்டு பாடம் செய்ய மறுத்து அடம்பிடித்தான். வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்து சிறுவனை கடுமையாக அடித்து உதைத்தனர். இதனால் அவன் மயக்கம் அடைந்தான். உடனே அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் தாக்கப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு அவன் மரணம் அடைந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொல்லப்பட்ட சிறுவனின் 19 வயது அண்ணன் உள்பட 4 பேரை கைது செய்தனர். #MulhouseBoyMurder
Tags:    

Similar News