செய்திகள்

வியட்நாம் நாட்டில் இந்து கோவிலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்

Published On 2018-11-19 12:05 GMT   |   Update On 2018-11-19 12:05 GMT
அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பழங்காலத்தை சேர்ந்த இந்து கோவிலை இன்று பார்வையிட்டார். #RamNathKovind #Hindutemplecomplex #RamNathKovindinVietnam
ஹனோய்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

நேற்று பிற்பகல் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.

இந்த இடம் ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் வரலாற்று சிறப்புக்குரிய இடங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

மேலும், அங்குள்ள 2 ஆயிரம் ஆண்டுகால பழைமை வாய்ந்த அருங்காட்சியகத்தையும் ஜனாதிபதி சுற்றிப் பார்த்தார்.இந்த அருங்காட்சியத்தில் இந்து-புத்த சமயங்களை சேர்ந்த சாம் நாகரிகம் காலத்து சிற்பங்களையும் அவர் கண்டு ரசித்தார்.

21-ம் தேதிவரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #RamNathKovind  #Hindutemplecomplex #RamNathKovindinVietnam
Tags:    

Similar News