செய்திகள்

உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா

Published On 2018-11-15 10:18 GMT   |   Update On 2018-11-15 10:18 GMT
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது பிரிட்டன் பிரதமர் இன்று சமர்ப்பித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பிரெக்சிட் மந்திரி ராஜினாமா செய்துள்ளார். #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns
லண்டன்:

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் வரைவு உடன்படிக்கையை பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள பிரெக்சிட் மந்திரி டோம்னிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நல்ல மனசாட்சியின்படி இந்த உடன்படிக்கையை ஆதரிக்க முடியாததால் இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #Brexitministerresigns #DominicRaabresigns
Tags:    

Similar News