செய்திகள்

கயானா நாட்டில் தாறுமாறாக தரையிறங்கிய விமானம் - 6 பேர் படுகாயம்

Published On 2018-11-09 12:42 GMT   |   Update On 2018-11-10 02:40 GMT
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில் இன்று அவசரமாக தரையிறங்கிய விமானம் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர். #Boeingjetcrashlands #Guyanaairport #Guyanaairportcrashland
ஜார்ஜ்டவுன்:

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

இந்நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏர் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடா நாட்டில் உள்ள டொரான்ட்டோ நகரை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.

வானில் உயரக் கிளம்பிய சில நிமிடத்தில் இயந்திர கோளாறு உள்ளதை அறிந்த விமானி அந்த விமானம் உடனடியாக ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

இதைதொடர்ந்து ,கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை  விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் இருந்த கம்பி வேலியை உடைத்துகொண்டு நின்றது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட சில பகுதிகள் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Boeingjetcrashlands #Guyanaairport #Guyanaairportcrashland
Tags:    

Similar News