செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்தது- 2 தொழிலாளர்கள் பலி, 18 பேர் சிக்கித் தவிப்பு

Published On 2018-10-22 04:17 GMT   |   Update On 2018-10-22 04:17 GMT
சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. #ChinaCoalMine #CoalMineCollapse
பீஜிங்:

சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும் சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்புக்குழுவைச் சேர்ந்த 170 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்திருந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 18 பேரை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்களின் நிலை என்ன? என்பதும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு சீனாவில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #ChinaCoalMine #CoalMineCollapse 
Tags:    

Similar News