செய்திகள்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பிரெட் கவனாக்கை உறுதி செய்தது செனட் சபை

Published On 2018-10-06 21:17 GMT   |   Update On 2018-10-06 21:17 GMT
அமெரிக்க செனட் சபை பிரெட் கவனாக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை நேற்று உறுதி செய்துள்ளது. #DonaldTrump #BrettKavanaugh #SupremeCourt
வாஷிங்டன்:

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.

இதற்கிடையே, அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பிரெட் கவனாக்குக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் அவர் மயிரிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், நேற்று கூடிய அமெரிக்காவின் செனட் சபையில் பிரெட் கவனாக்க்கு ஆதரவாக 50 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் செனட் சபை அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை உறுதி செய்துள்ளது. #DonaldTrump #BrettKavanaugh #SupremeCourt
Tags:    

Similar News