செய்திகள்

அபுதாபி லாட்டரியில் கேரள தொழிலாளிக்கு ரூ.13 கோடி பரிசு

Published On 2018-10-04 07:04 GMT   |   Update On 2018-10-04 07:04 GMT
அபுதாபியில் வேலைபார்த்து வந்த கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.13 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது. #LotteryPrize
அபிதாபி:

கேர மாநிலம் காசர் கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

சமீபத்தில் அங்கு விற்பனையான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டு வாங்கினார். அதன் குலுக்கல் நடந்தது. அதில் பம்பர் பரிசு தொகையான 70 லட்சம் திர்ஹாம் விழுந்தது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடியாகும். இவரது சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதை முதலில் அவர் நம்பவில்லை. விளையாட்டாக கேலி செய்கிறார்கள் என நினைத்தார். பின்னர் உண்மையில் பரிசு கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் இருந்து ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இவருடன் பணிபுரியும் நண்பரின் 2 சிறுநீரங்களும் செயலிழந்துவிட்டன. அவரது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய இருப்பதாகவும் கூறினார்.

வழக்கமாக நண்பர்களுடன் இணைந்து தான் பரிசு சீட்டு வாங்குவேன். முதன் முறையாக நானே தனியாக லாட்டரி சீட்டு வாங்கினேன். அதற்கு தான் பரிசு கிடைத்துள்ளது என்றார். #Keralaman #LotteryPrize
Tags:    

Similar News