செய்திகள்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அமைச்சரவை விரிவாக்கம்- 6 மந்திரிகள் பதவியேற்பு

Published On 2018-09-11 10:22 GMT   |   Update On 2018-09-11 10:22 GMT
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 6 புதிய மந்திரிகள் பதவியேற்றுள்ளனர். #PakistanCabinet #ImranKhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் அவரது அமைச்சரவையில் 15 பேர் மந்திரிகளாகவும், 5 பேர் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர்.

இந்நிலையில், இம்ரான் கான் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்து, 6 பேரை இணைத்துள்ளார். புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. மத்திய மந்திரிகளாக உமர் அயூப், அலி முகமது கான் மெஹர் மற்றும் சையத் அலி ஹைதர் ஜைதி ஆகியோர் மத்திய மந்திரிகளாக பதவியேற்றனர். முகமது ஷபிர் அலி, முராத் சயீத் மற்றும் முகமது ஹமத் அஸார் ஆகியோர் இணை மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் பிரதமர் இம்ரான் கான், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று பதவியேற்ற மந்திரிகளில் உமர் அயூப் கான், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிடிஐ கட்சியில் சேர்ந்தார். இதற்கு முன்பு, சவுகத் அஜீஸ் அமைச்சரவையில் நிதித்துறை இணை மந்திரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #PakistanCabinet #ImranKhan
Tags:    

Similar News