செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவ் தீவில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #PhilippinesEarthquake
மணிலா:
ரிக்டர் அளவுக்கோலில் 6.4 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #PhilippinesEarthquake
புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுக்கோலில் 6.4 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #PhilippinesEarthquake