செய்திகள்

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலையில் தீ- பார்வையாளர்கள் வெளியேற்றம்

Published On 2018-08-28 11:31 IST   |   Update On 2018-08-28 11:31:00 IST
அமெரிக்காவில் தீவிபத்து காரணமாக சுதந்திர தேவி சிலையை காணவந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். #LibertyStatue
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்பர் தீவில் சுதந்திர தேவி சிலை உள்ளது. கையில் தீபத்தை ஏந்திய நிலையில் இருக்கும் அந்த சிலை 151 அடி உயரம் கொண்டது.

தீவின் நடுவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த சிலையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு பயன்படுத்தப்பட்ட 3 புரோடேன் கியாஸ் சிலிண்டர்களில் இருந்து வெளியான தீ மளமளவென பரவியது.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பார்வையாளர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீவிபத்து காரணமாக சுதந்திர தேவி சிலையை காணவந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். #LibertyStatue
Tags:    

Similar News