செய்திகள்
ஈரானில் பரிதாபம் - பாய்லர் வெடித்து சிதறி 10 பேர் பலி
ஈரான் நாட்டில் குடியிருப்பு பகுதியில் பாய்லர் ஒன்று வெடித்து சிதறியதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.
டெஹ்ரான்’
ஈரான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது மஷாத் நகரம். இங்குள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றின் அருகில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் அங்கிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பாய்லர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த மூன்றுக்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியானவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.