செய்திகள்

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே துப்பாக்கி சூடு - இந்திய தூதருக்கு பாக். சம்மன்

Published On 2018-08-19 03:11 IST   |   Update On 2018-08-19 03:11:00 IST
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. #ceasefireviolation
இஸ்லாமாபாத் :

ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள தானா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததாகவும், 6 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்கிற்கு பாகிஸ்தான் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்குவது வன்மையாக கண்டிக்கத்து. போர் நிறுத்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதால் பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் அனுப்பியுள்ள சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ceasefireviolation
Tags:    

Similar News