செய்திகள்

பாகிஸ்தான் வருங்கால பிரதமருடன் இந்திய உயர்தூதர் சந்திப்பு

Published On 2018-08-10 12:51 GMT   |   Update On 2018-08-10 13:23 GMT
பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான் கானுடன் இந்தியாவின் உயர்தூதர் அஜய் பிசாரியா இன்று சந்தித்தார். #ImranKhan #AjayBisaria #Pakistan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆட்சியில் இருந்தபோது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பின்னடைவு காணப்பட்டது. இதனால் தற்போது வரும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இம்ரான் கூறியிருந்தார்.



இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர்தூதரான அஜய் பிசாரியா இன்று இம்ரான் கானை சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமராக பதிவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் பிசாரியா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை இம்ரான் கானுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். #ImranKhan #AjayBisaria #Pakistan
Tags:    

Similar News