செய்திகள்

வெனிசுலா அதிபர் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு - வீடியோ

Published On 2018-08-05 00:42 GMT   |   Update On 2018-08-05 00:42 GMT
வெனிசுலா அதிபர் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Maduro #Venezuela
கராகஸ் :

வெனிசுலா தேசிய படைகளின் 81-வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற அதிபர் மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.   


வெனிசுலா தொலைத்தொடர்பு துறை மந்திரி ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களிடம் கூறுகையில், மதுரோ உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதிபர் மதுரோ உயிர்பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த, தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ராணுவ உயரதிகாரிகள் புடைசூழ நின்றிருக்க, மனைவியுடன் மதுரோ உரையாற்றிய போது குண்டுவெடிப்பு சத்தம் கேட்கிறது. பின்னர் படை வீரர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிப்பது போல் பதிவாகியுள்ளது. #Maduro #Venezuela
Tags:    

Similar News