செய்திகள்

அடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு

Published On 2018-07-21 21:33 GMT   |   Update On 2018-07-21 21:33 GMT
அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. #NawazSharif #Maryam
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

தற்போது அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.

ஆனால் மரியம், அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

தனது தந்தை நவாஸ் ஷெரீப், கணவர் கேப்டன் சப்தார் ஆகியோருடன் தான் அடியலா சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதைத்தான் விரும்புவாக அதிகாரிகளிடம் மரியம் தெரிவித்து விட்டார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

நவாஸ் ஷெரீப்பும், மரியமும் காவலில் வைக்கப் படுவதற்காக சிஹாலா போலீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓய்வு இல்லம் ரூ.20 லட்சம் செலவில் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது.  #NawazSharif #Maryam #tamilnews 
Tags:    

Similar News