செய்திகள்

அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க துருக்கி நீதிமன்றம் மறுப்பு

Published On 2018-07-18 13:21 GMT   |   Update On 2018-07-18 13:21 GMT
துருக்கியில் அமெரிக்காவுக்காக உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியாரை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. #U.S.pastorinTurkishjail #U.S.pastor
அன்காரா:

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் ஆன்ட்ரு ப்ருன்சன். பாதிரியாரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கி நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் அரசை கவிழ்க்க நடந்த புரட்சியின்போது சில கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக ஆன்ட்ரு ப்ருன்சன் கைது செய்யப்பட்டார். அவர்மீது ஆட்சியை கவிழ்க்க சதி, பயங்கரவாதிகளை ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய வழக்கின் விசாரணையின்போது பாதிரியார் ஆன்ட்ரு ப்ருன்சனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை ஜாமினில் விடுவிக்க மறுத்துவிட்ட நீதிபதி வழக்கின் மறுவிசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #U.S.pastorinTurkishjail #U.S.pastor
Tags:    

Similar News