செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து - திருமண கோஷ்டியினர் 18 பேர் பலி

Published On 2018-07-16 06:23 GMT   |   Update On 2018-07-16 06:23 GMT
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். #PakistanAccident
கராச்சி:

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஐதராபாத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் சந்ராந்த் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பேருந்தில் ஊர் திரும்பினர். இன்று அதிகாலையில், பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் நெடுஞ்சாலையோரம் வாகனத்தை நிறுத்தி டயர் மாற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி, நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து முற்றிலும் சிதைந்துபோனது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



இந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஹாலா மற்றும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் டிரைவர்கள் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. #PakistanAccident
Tags:    

Similar News