செய்திகள்
அமெரிக்க தூதர் நிக்கி ஹலே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹலே இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலிமைப்படுத்தும் நோக்கத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். #NikkiHaley
புதுடெல்லி:
ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹலே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான இன்று நிக்கி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றி பார்த்தார். குறிப்பாக முகலாய ஆட்சியை சேர்ந்த பேரரசர் உமாயூனின் சமாதிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிக்கி ஹலே,
மேலும், உமாயூனின் சமாதியை பார்வையிட்டது இந்திய கலாச்சாரத்தை நினைவூட்டுகிறது. இது போன்ற பாரம்பரியத்தை பராமரித்து வருவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு தங்கள் முன்னோர்கள் குறித்து தெரிய வரும். மத சுதந்திரம் என்பது உரிமை மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமையும்' என கூறினார்.
இதையடுத்து நிக்கி பல ஆன்மீக தளங்களை சுற்றி பார்க்க உள்ளார். மேலும், மூத்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்களை சந்திக்க உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NikkiHaley
ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹலே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான இன்று நிக்கி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றி பார்த்தார். குறிப்பாக முகலாய ஆட்சியை சேர்ந்த பேரரசர் உமாயூனின் சமாதிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிக்கி ஹலே,
'இந்தியாவிற்கு மறுபடியும் வந்தது மிகுந்த மகழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் சொந்த மண்ணிற்கு வந்துள்ளேன். இந்த வருகை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக அமையும். இருவரும் ராணுவத்தின் பலத்தை அதிகரத்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே பல பொதுவான செயல்கள் உள்ளது.