செய்திகள்
பேத்தி சோலியுடன் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்

Published On 2018-06-23 11:27 IST   |   Update On 2018-06-23 11:27:00 IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரின் மகளுக்கு டுவிட்டர் மூலம் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். #Trump #Chloe
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர். இவருக்கு 4 வயதில் சோலி என்ற மகள் இருக்கிறாள். அவள் மீது டிரம்புக்கு கொள்ளை பிரியம்.

இந்த நிலையில் அவளுக்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. கனடா நாட்டின் டெலிவி‌ஷன் ஒன்றில் எழுத்தாளராக பணிபுரியும் பாட்டுசால்ட் என்பவர் அதை பதிவு செய்திருந்தார். அதில் கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் ‘சோலி’யையும் விட மாட்டோம் என குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்து சமூக வலை தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



அதையடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் சிலர் அதை படமாக பிடித்து தங்களது பக்கங்களில் பதிவிட்டனர். பிரபல நடிகர் ஜேம்ஸ்வுட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாட் டுசால்ட் பதிலடி கொடுத்தார்.

மேலும் இதை உளவுத்துறை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து பாட்டுசால்ட் மன்னிப்பு கேட்டார். #Trump #Chloe
Tags:    

Similar News