செய்திகள்

பாக். பாராளுமன்ற தேர்தல் - இம்ரான் கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி வேட்புமனுக்கள் தள்ளுபடி

Published On 2018-06-19 15:56 GMT   |   Update On 2018-06-19 15:56 GMT
பாகிஸ்தான் பாராளுமன்றதேர்தலில் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. #Pakistan #ImranKhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 25-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் இஸ்லாபாத் தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை என அவர்களது வேட்புமனுக்கள் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் நாளை முறையிட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் இஸ்லாமாபாத் உள்பட 5 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் முன்னாள் அதிபர் முஷாரப் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவும் நீதிமன்ற உத்தரவின் படி நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News