search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shahid Khaqan abbassi"

    பாகிஸ்தான் பாராளுமன்றதேர்தலில் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட இம்ரான்கான் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தேர்தல் தீர்ப்பாயம் அவரது மனுவை ஏற்றுக்கொண்டது. #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 25-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் இஸ்லாபாத் தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை என அவர்களது வேட்புமனுக்கள் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் அவர்கள் முறையிட்டனர். அவர்களது மேல்முறையீட்டை இன்று விசாரித்த தேர்தல் தீர்ப்பாயம் இருவரது வேட்பு மனுக்களையும் ஏற்றுள்ளது.

    இம்ரான் கான் இஸ்லாமாபாத் உள்பட 5 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ராவல்பிண்டி தொகுதியில் போட்டியிட அப்பாஸி தாக்கல் செய்த மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்த நிலையில், இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தும் தேர்தல் தீர்ப்பாயம் அப்பாஸியின் மனுவை ரத்து செய்தது சரியே என உத்தரவிட்டது.
    பாகிஸ்தான் பாராளுமன்றதேர்தலில் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 25-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் இஸ்லாபாத் தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

    இந்நிலையில், வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை என அவர்களது வேட்புமனுக்கள் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் நாளை முறையிட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

    இம்ரான் கான் இஸ்லாமாபாத் உள்பட 5 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் முன்னாள் அதிபர் முஷாரப் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவும் நீதிமன்ற உத்தரவின் படி நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×