செய்திகள்

கொலம்பியாவின் அதிபராகிறார் 41 வயதே ஆன இவான் டியூக்

Published On 2018-06-18 14:38 GMT   |   Update On 2018-06-18 14:38 GMT
கொலம்பியாவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவான் டியூக் 54 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். #ColombiaDecide #IvanDuque
போகோடா:

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. வலதுசாரி ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் செனட் உறுப்பினர் இவான் டியூக் மற்றும் முற்போக்காளர் கட்சி சார்பில் முன்னாள் மேயர் மற்றும் கொரில்லா போராளியாக இருந்த கஸ்டாவோ பெட்ரோ போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் இவான் டியூக் 54 வாக்குகளும், கஸ்டாவோ பெட்ரோ 42 சதவிகித வாக்குகள் பெற்றனர். இதன் மூலம், 41 வயதே ஆன இவான் டியூக் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் அந்நாட்டு வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிபரானவர் என்ற பெயரையும் டியூக் பெற உள்ளார். 

முன்னாள் அதிபர் அல்வோரோ உரைப்-க்கு ஆலோசகராக இருந்த டியூக், அந்நாட்டு அரசு கிளர்ச்சியாளர்களுடன் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News