செய்திகள்

நியூயார்க் ஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கேரட் தங்க கோழிக்கறி - குவியும் வாடிக்கையாளர்கள்

Published On 2018-06-12 11:56 GMT   |   Update On 2018-06-12 11:56 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கேரட் தங்க கோழிக்கறியை சாப்பிட ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். #goldchickenwings
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுகிறது.



மேலும், கோழிக்கறியை வழக்கமாக நாம் அனைவரும் பொன்னிறமாக பொறித்து உண்ணுவோம். ஆனால் அந்த பாரில் கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர். அந்த பாரில் பரிமாறப்படும் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை இந்திய மதிப்பில் 3000 ரூபாய். இருப்பினும், தங்க கோழிக்கறியை சாப்பிட வாடிக்கையாளர்கள் குவிகின்றனர். #goldchickenwings
Tags:    

Similar News