செய்திகள்

பாகிஸ்தானில் அடுத்த ஆட்சியை தேர்வு செய்யும் நான்கரை கோடி இளம் வாக்காளர்கள்

Published On 2018-05-25 10:06 GMT   |   Update On 2018-05-25 10:06 GMT
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு விரைவில் நடைபெறும் தேர்தலில் சுமார் நான்கரை கோடி முதன்முறை வாக்காளர்களான இளைஞர்களும், இளம்பெண்களும் வாக்களிக்க உள்ளனர். #pakistanelections
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நடப்பு பிரதம மந்திரி அப்பாஸி மற்றும் முன்னாள் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரி கட்சியின் சார்பாக பிலாவால் போட்டியிட உள்ளனர். நாட்டில் மொத்தம் 100 மில்லியன் வாக்களார்கள் உள்ளனர். அவர்களில் 59.2 மில்லியன் ஆண் மற்றும் 46.7 மில்லியன் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் படி, இந்த ஆண்டு 46 மில்லியன் முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

18 வயதிலிருந்து 25 வயது வரை 17.44 மில்லியன் பேரும், 26 வயதிலிருந்து 35 வயது வரை 28.99 மில்லியன் பேரும் மற்றும் 36 வயதிலிருந்து 45 வயது வரை 22.48 பேரும் உள்ளனர். #pakistanelections
 
Tags:    

Similar News