செய்திகள்

ராஜபக்சேவின் ஊழல், மோசடியால் கடன் நெருக்கடியில் இலங்கை தத்தளிப்பு - நிதி மந்திரி

Published On 2018-05-21 07:29 GMT   |   Update On 2018-05-21 07:29 GMT
ராஜபக்சேவின் ஊழல், மோசடியால் கடன் நெருக்கடியில் இலங்கை அரசு தத்தளிப்பதாக நிதிமந்திரி மங்கள சமரவீரா கூறியுள்ளார். #RajapaksaCorruption

கொழும்பு:

இலங்கை நிதிமந்திரி மங்கள சமரவீரா கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் அரசு பல ஊதாரித்தனமான திட்டங்களை தீட்டியது. அதை செயல்படுத்த சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் அதிக அளவில் கடன் பெற்றார்.

வெளிநாடுகளிடம் இருந்து ரூ.65 ஆயிரம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. அதில் ராஜபக்சே அரசு மிக அதிக வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கோடிகடன் சீனாவிடம் இருந்து ஹம்பந் கோட்டா துறைமுகம் மற்றும் ராஜபக்சே பெயரில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்துக்காக வாங்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே பெயரில் கட்டப்பட்ட விமான நிலையத்துக்கு தினமும் ஒரே ஒரு விமானம் மட்டுமே வந்து செல்கிறது.


இதுபோன்ற பல ஊதாரித் தனமான திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. ராஜபக்சே ஆட்சியில் ஊழலும், மோசடியும் பெருமளவில் நடந்துள்ளது. இதனால் கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது அடுத்த ஆண்டில் மிகவும் மோசமடையும். ஏனெனில் வருகிற 2019-ம் ஆண்டில் ஏராளமான கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உள்ளது’’ என்றார். #RajapaksaCorruption

Tags:    

Similar News