செய்திகள்

நேபாளத்தில் நீர்மின் நிலைய திட்ட பணிகளுக்கு மோடி, சர்மா ஒலி இணைந்து அடிக்கல் நாட்டினர்

Published On 2018-05-11 15:59 GMT   |   Update On 2018-05-11 15:59 GMT
2 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #ModiInNepal
காத்மாண்டு:

நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார்.

விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்ற மோடியை நேபாள பிரதமர் சர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி. அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு இயக்கப்படும் நேரடி பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இதனை அடுத்து, அந்நாட்டு அதிபர் பந்தாரி மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோரை தனித் தனியாக சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட உள்ள நீர் மின்நிலைய திட்டங்களுக்கு மோடி மற்றும் சர்மா ஒலி இணைந்து அடிக்கல் நாட்டினர். #ModiInNepal
Tags:    

Similar News