செய்திகள்

அஜர்பைஜான் நாட்டில் உள்ள டிரம்ப் டவரில் திடீர் தீ விபத்து

Published On 2018-04-29 03:55 IST   |   Update On 2018-04-29 03:55:00 IST
அஜர்பைஜான் நாட்டில் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான டிரம்ப் டவரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பாகு:

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் 33 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது.

இந்நிலையில், நேற்று டிரம்ப் டவரில் திடீரென தீ பற்றியது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. 

தகவலறிந்து அங்கு நான்கிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 50க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

ஏற்கனவே, ஏப்ரல் மாதம் 7-ம் தேதி நியூயார்க்கில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

Similar News