செய்திகள்
சோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் ஒருவர் பலி
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பாராளுமன்றம் கட்டிடம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Somaliaparliament #Suicidecarbomb
மொகடிஷு:
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மொகடிஷுவில் உள்ள பாராளுமன்றம் கட்டிடம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றம் அருகேயுள்ள சாயிட்க்கா சோதனைச் சாவடி வழியாக இன்று மாலை வேகமாக வந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் சோமாலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #tamilnews #Somaliaparliament #Suicidecarbomb