செய்திகள்

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 455 கிலோ எடை வெடிகுண்டு ஹாங்காங்கில் கண்டுபிடிப்பு

Published On 2018-01-29 05:25 GMT   |   Update On 2018-01-29 05:25 GMT
இரண்டாம் உலகப் போரின் போது ஹாங்காங் மீது வீசப்பட்டிருந்த 455 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மண்ணில் புதைந்திருந்த நிலையில் தற்போது கண்டறிந்து செயல் இழப்பு செய்யப்பட்டது.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் வாங்சை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பூமியை தோண்டிய போது வெடிக்காத நிலையில் புதைந்து கிடந்த வெடி குண்டை கண்டெடுத்தனர்.

இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த அவர்கள் அக்குண்டை பரிசோதித்தனர். அது 1000 பவுண்டு அதாவது 455 கிலோ எடை இருந்தது.

இக்குண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங் மீது வீசப்பட்டது. வெடிக்காமல் அப்படியே மண்ணில் புதைந்து இருந்தது.

பின்னர் இக்குண்டு நிபுணர்களால் கவனமாக படிப்படியாக செயல் இழப்பு செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டு ஹாங்காங்கில் தற்போது 2-வது தடவையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு தடவை இது போன்று ஒரு பெரிய குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது.
Tags:    

Similar News