செய்திகள்

ஆப்ரிக்காவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Published On 2018-01-28 18:27 GMT   |   Update On 2018-01-28 18:27 GMT
ஆப்ரிக்காவின் தென்மேற்கு பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று இரவு ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. #EarthQuake
கேப்டவுன்:

ஆப்ரிக்காவின் தென்மேற்கு பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று இரவு ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.

ஆப்ரிக்காவின் தென்மேற்கு பகுதியில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News