செய்திகள்

சீனாவில் 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்த கொலையாளி - நிரந்தரமான பேச்சு திறன் இழந்த சம்பவம்

Published On 2017-12-28 10:43 GMT   |   Update On 2017-12-28 10:43 GMT
சீனாவில் 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்த கொலையாளி நிரந்தரமாக பேச்சு திறனை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்:

சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த செங் என்ற வாலிபர் 2005 ம் ஆண்டு தனது மனைவியின் உறவினரை கொலை செய்து விட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று விட்டார். சொத்து தகராறினால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. செங்கின் பெற்றோர்கள் அவரை காணவில்லை என போலிசில் புகார் அளித்து 12 ஆண்டுகளாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், செங் வேறொரு மாகாணத்தில் கட்டிட தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். தன்னை பற்றிய உண்மை வெளியில் தெரியாமல் இருக்க 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்து வந்துள்ளார்.  திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வந்த இவரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்தனர். அவரின் ரத்தத்தை சோதனை செய்ததில் அவரின் உண்மையான அடையாளம் தெரிய வந்தது. அவரின் டி.என்.ஏ. அறிக்கை மூலம் கண்டறிந்ததாக போலீசார் கூறினர்.

12 ஆண்டுகளாக ஊமையாக நடித்தனால் அவர் தன் பேச்சுத்திறனை நிரந்தரமாக இழந்தார். கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. கொலை குற்றத்திலிருந்து தப்பிக்க ஊமையாக நடித்த வாலிபர் பேச்சுத்திறனை இழந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News