செய்திகள்

பிரிட்டன்: கடத்தலில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இந்தியருக்கு சாதனையாளர் விருது

Published On 2017-11-30 09:45 GMT   |   Update On 2017-11-30 09:45 GMT
பிரிட்டனில் 13 வயது பள்ளிச் சிறுமியை காப்பாற்றிய இந்தியாவைச் சேர்ந்த கார் டிரைவருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
லண்டன்:

பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த சட்பீர் அரோரா என்பவர் தனது மனைவியுடன் இணைந்து டேக்சி ஓட்டி வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி 13 வயது பள்ளிச்சிறுமியை அவரது வீட்டிலிருந்து களவுசெஸ்டர் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் அரோராவிற்கு சந்தேகம் வந்துள்ளது.



 சிறுமி வீட்டிற்கு தெரியாமல் இங்கு வந்துள்ளார் என எண்ணி சிறுமியிடம் விசாரித்தார். சிறுமி சரிவர பதில் கூறாததால் சிறுமி போனில் பேசியதை பதிவு செய்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை சாம் ஹெவிங்ஸ் என்பவர் கடத்துவதற்கு திட்டம் தீட்டிய உண்மை தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்தனர்.

 

இந்நிலையில், அரோராவின் செயலை பாராட்டி அவருக்கு சிறந்த பாதுகாவலர் என்ற சான்றிதழை வழங்க உள்ளதாக அப்பகுதி கவுன்சிலர் அறிவித்துள்ளார். மேலும் அவர், அரோரா மிகவும் சிறந்த பணியை செய்துள்ளார். சிறிதும் யோசிக்காமல் செய்த காரியத்தால் சிறுமி காப்பாற்றப்பட்டாள் என பாராட்டினார்.
Tags:    

Similar News