செய்திகள்

உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பது அளவுக்கு மீறிய செயல் - தெரசா மே

Published On 2017-09-28 21:22 GMT   |   Update On 2017-09-28 21:22 GMT
லண்டன் நகரில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறைத்துறை மறுப்பது அளவுக்கு மீறிய செயல் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.
லண்டன்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இயங்குவதற்காக அந்தந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்று உரிமம் பெற வேண்டும்.

லண்டனில் இந்நிறுவனத்தின் உரிமம் வருகிற 30ம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்த உரிமத்தை புதுப்பிக்க அந்நாட்டு போக்குவரத்து ஒழுங்குமுறை துறை மறுப்பு தெரிவித்துள்ளது. உபேரின் அணுகுமுறை மற்றும் நடத்தையானது அந்நிறுவனத்தின் பெருநிறுவன பொறுப்பில்லாமையை நிரூபிக்கின்றது. மேலும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை எனவும் காரணம் கூறியுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் முதல் லண்டன் நகரில் இந்நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உபேர் நிறுவனம் மீதான இந்த நடவடிக்கை அளவுக்கு மீறியது என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார். இதுகுறித்து பேசுகையில், ‘பிரிட்டன் தலைநகரான லண்டனில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறை துறை மறுப்பது அளவுக்கு மீறிய செயல் என நான் கருதுகிறேன். இதனால் பலர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’, என மே கூறினார்.
Tags:    

Similar News