செய்திகள்

பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

Published On 2017-09-28 05:37 GMT   |   Update On 2017-09-28 05:38 GMT
உலகம் முழுவதும் பிரபலமுடைய கவர்ச்சி இதழான 'பிளேபாய்'-யின் நிறுவனர் ஹக் ஹெப்னர் (91) வயோதிகம் காரணமாக இன்று காலமானார்.
நியூயார்க்:

அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பிளேபாய்' இதழுக்கு, உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு. இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர்.

1953-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழானது, உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனையை படைத்தது. 1975-ம் ஆண்டுகளில் 70 லட்சம் பிரதிகள் வரை விற்ற இந்த இதழானது, தற்போது இணையதளத்தின் கிடுகிடு வளர்ச்சியால் மாதம் எட்டு லட்சம் பிரதிகள் அளவுக்கு மட்டுமே விற்பனையாகிறது.

இதற்கிடையே, 2016-ம் ஆண்டிலிருந்து 'பிளேபாய்' அட்டையில் கவர்ச்சி படங்கள் இடம் பெறாது என நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. கடைசியாக வெளியான, 'பிளேபாய்' இதழின் அட்டையில், பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனின், கவர்ச்சி படங்கள் இடம் பெற்றன.

தனது 86-வது வயதிலும் தன்னைவிட 60 வயது குறைவான கிறிஸ்டன் ஹாரீஸ் என்பவரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார் ஹெப்னர். இந்நிலையில், தற்போது வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துகொண்டிருந்த ஹெப்னர் இன்று மரணமடைந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

1990-வது ஆண்டில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'பிளேபாய்' இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News