செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் பயணம்

Published On 2017-08-31 00:05 IST   |   Update On 2017-08-31 00:05:00 IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாசை ரத்த புற்றுநோய் தாக்கி உள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.
லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாசை ரத்த புற்றுநோய் தாக்கி உள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். பாகிஸ்தான் இடைத்தேர்தலில் போட்டியிடும் குல்சூமுக்கு, அடுத்த வாரம் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இதற்காக லண்டனில் தங்கியுள்ள குல்சூமை பார்ப்பதற்காக நவாஸ் ஷெரீப் நேற்று இங்கிலாந்து புறப்பட்டார். லாகூர் விமான நிலையத்தில் அவரது சகோதரர் சேபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசிப் கர்மானி ஆகியோர் நவாஸ் ஷெரீப்பை வழியனுப்பி வைத்தனர்.

லண்டனில் 10 நாட்கள் தங்கியிருக்கும் நவாஸ் ஷெரீப் பக்ரீத் பண்டிகையையும் தனது குடும்பத்தினருடன் அங்கே கொண்டாடுகிறார். மேலும் அவரது கட்சியான ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்’ சார்பில் லண்டனில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் நவாஸ் ஷெரீப் பங்கேற்கிறார். 

Similar News