செய்திகள்

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

Published On 2017-07-06 05:00 IST   |   Update On 2017-07-06 05:00:00 IST
அமெரிக்காவில் மேடிசன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேடிசன்:

அமெரிக்காவின் மைன் மாகாணத்தில் மேடிசன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

2015-க்கு பிறகு மைன் மாகாணத்தில் நடைபெறும் கொடூரமான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மைனின் கன்ட்ரி சாலை, ஸ்கோவேஜன் ஃபேர்கிரவுண்ட்ஸ் மற்றும் சோமர்செட் நாட்மு பகுதிகளில் அந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மைன் மக்கள் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஸ்டீவ் மிக்காஸ்லண்ட் தெரிவித்துள்ளார்.



படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்த தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்துள்ளனர்.

மத்திய மேடிசன் நகரில் இருந்து 4 மைல் தூரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அருகாமையிலுள்ள குடியிருப்பு வாசிகளிடம் இந்த சம்பவம் குறித்து கேட்ட போது, அங்கு நடைபெற்ற பார்டியின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது பின்னர் தான் தெரியவந்தது என்று கூறுகின்றனர். 

Similar News