செய்திகள்

உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானம்: அமெரிக்க ராணுவம் தயாரிப்பு

Published On 2017-05-27 05:44 GMT   |   Update On 2017-05-27 05:44 GMT
உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்க ராணுவம் மிக ரகசியமாக அதிவேக ராக்கெட் போன்ற சிறப்பு விமானத்தை தயாரித்துள்ளது. அதற்கு போயிங் எக்ஸ்.எஸ்.1 என பெயரிடப்பட்டுள்ளது.

பான்டம் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்காக இதை தயாரித்துள்ளது. அதற்கான அனுமதியை இந்நிறுவனத்துக்கு ராணுவம் வழங்கியது. இந்த விமானம் 1,360 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அதிவேகமாக பலத்த சத்தத்துடன் பறந்து செல்லும் திறன்படைத்தது. இது மற்ற விமானங்களை விட 5 முதல் 10 மடங்கு அதிக வேகம் செல்லும் திறன் கொண்டது.

இந்த விமானம் மூலம் உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் சென்று அடைய முடியும். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த விமானம் விண்கலம், போன்ற வடிவமைப்புடன் கூடியது.

Tags:    

Similar News