செய்திகள்

மான்செஸ்டர் தாக்குதல்: இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Published On 2017-05-26 20:52 GMT   |   Update On 2017-05-26 20:52 GMT
மான்செஸ்டர் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக 11-வது நபரை ப்ரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
லண்டன்:

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் திங்கட்கிழமை இரவு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி  நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மான்செஸ்டர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் கைது  செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில், மத்திய இங்கிலாந்தின் நனீட்டன் நகரில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒரு பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் 9 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மான்செஸ்டர் போலீஸ் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News