செய்திகள்

ஈராக் ஹெலிக்காப்டரை சுட்டு வீழ்த்தியது ஐ.எஸ்.- 2 பைலட்கள் பலி

Published On 2017-04-06 21:26 IST   |   Update On 2017-04-06 21:26:00 IST
ஈராக் ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிக்காப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் ஹெலிக்காப்டரில் இருந்த 2 பைலட்கள் பலியாகினர்.
பாக்தாத்:

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்பதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
 
ஈராக் படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்துகிறது.

இந்நிலையில், ஈராக் ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிக்காப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று சுட்டு வீழ்த்தினர். மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் ஹெலிக்காப்டர் நுழைந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹெலிக்காப்டரில் இருந்த 2 பைலட்கள் பலியாகினர். 



ஈராக் ராணுவம் தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தரையில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது வான்வெளி தாக்குதலா என்று தெரிவிக்கப்படவில்லை.

Similar News