செய்திகள்

2030-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 145 கோடியாக அதிகரிக்கும்

Published On 2017-03-12 16:05 IST   |   Update On 2017-03-12 16:06:00 IST
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வரும் 2030-ம் ஆண்டில் 145 கோடியாக மக்கள் தொகை உயர்ந்திருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்:

உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தை தற்போது சீனா வகித்து வருகின்றது. 135 கோடி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.  ஒரு தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் சட்டம் சீனாவில் நடைமுறையில் இருந்துவந்தது. இச்சட்டத்தால் வரும் காலத்தில் இளைஞர்கள் பலம் குறையும் எனக் கருதிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சட்டத்தை நீக்கியது.

இந்நிலையில்,  2016-ம் ஆண்டில் 1.84 லட்சம் குழந்தைகள் புதிதாக பிறந்துள்ளன. இதே விகிதம் நீடித்தால் வரும் 2030-ம் ஆண்டில் மக்கள் தொகை 145 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு தேசிய சுகாதார மற்றும் குடும்பக் கட்டுப்பாடு இயக்குநகரத்தின் துணைத் தலைவர் வாங் பேய்ன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 75 சதவிகித்தினர் 15 முதல் 65 வயதுடையவராக இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள தடை இல்லை என்ற போதிலும், 28 சதவிகிதம் தம்பதியர் மட்டுமே இரண்டாவது குழந்தை  பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News