செய்திகள்

பிரிட்டனுக்கு வாருங்கள்: டொனால்ட் டிரம்ப்புக்கு ராணி எலிசபத் அழைப்பு

Published On 2017-01-28 06:45 GMT   |   Update On 2017-01-28 06:45 GMT
பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக வருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ராணி எலிசபத் அழைப்பு விடுத்துள்ளார்.
லண்டன்:

பிரிட்டன் பிரதமர் தெரசா மே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

இருதலைவர்களும் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கினர். தெரசா மேவிற்கு அபிரகாம் லிங்கன் நினைவுச் சின்னத்தை டிரம்ப் வழங்கினார்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டிரம்ப், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய பிரிக்ஸிட் நடவடிக்கை பிரிட்டனுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அதிபராக பதவியேற்ற உடனே அமெரிக்காவிற்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக தெரசா மே தனது நன்றியை தெரிவித்தார். அப்போது, பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக வருமாறு டொனால்ட் டிரம்ப்புக்கு ராணி எலிசபத் அழைப்பு விடுத்துள்ளதாக தெரசா மே குறிப்பிட்டார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதவாக்கில் லண்டன் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News